விளையாட்டுத்துறை
அமைச்சினால் கொழும்பு டொரிங்டன் உள்ளக விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
தேசிய விளையாட்டு விழாவின் ஓரங்கமான கராத்தே சுற்றுப்போட்டியில் அம்பாறை மாவட்டத்தின்
அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.ஃபைனாஸ், 68 கிலோ எடைப்
பிரிவுக்குட்பட்ட குமிற்றிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனையொன்றை
நிலைநாட்டியுள்ளார்.
அக்கரைப்பற்று ராம்
கராத்தே சங்கத்தின் மாணவரான இவர் கடந்த மாதம் 27, 28, 29 ஆந் திகதிகளில் இடம்பெற்ற
குறித்த விளையாட்டு விழாவில் பெற்றிருக்கும் வெண்கலப் பதக்கமானது விளையாட்டுத்துறை
அமைச்சினால் நடாத்தப்பட்ட தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் அக்கரைப்பற்று
பிரதேசத்துக்குக் கிடைத்துள்ள முதலாவது பதக்கம் என்பதுடன், ராம் கராத்தே
சங்கத்தின் மாணவர்கள் கடந்த வருடம் காட்டா போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தை
வென்றிருந்தபோதும் குமிற்றிப் போட்டி ஒன்றில் பெற்றுக்கொள்ளும் முதலாவது
பதக்கமாகவும் அமைந்துள்ளது.
அக்கரைப்பற்று – 01,
கடற்கரை வீதியைச் சேர்ந்த முகம்மது சாலிஹு – ரிஸ்வானா தம்பதிகளின் புதல்வரான எம்.எஸ்.எம்.ஃபைனாஸ்,
ராம் கராத்தே சங்கத்தின் ஸ்தாபகரும் பிரதம போதனாசிரியருமான சிகான் கே.ஹேந்திரமூர்த்தியின்
வழிநடத்தலின் கீழ் கென்சி கே.ராஜேந்திர பிரசாத் மற்றும் கென்சி கே.சாரங்கன் ஆகியோரால்
பயிற்றுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
















