நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஆசிரியர் தின விழா



ஆசிரியர் தின நிகழ்வு நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் கடந்த 12. 10.2018 ந் திகதி வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் செல்வி கனகசூரியம் அகிலா அம்மணி அவர்களும் சிறப்பு அதிதிகளாக கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு கரிகரராஜ் அவர்களும் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு த.சோமசுந்தரம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

வித்தியாலயத்தின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்களை வரவேற்றல், ஆசிரியர் கீதம் இசைத்தல் ஆசிரியர் கௌரவிப்பு, அதிபர் கௌரவிப்பு, ஆசிரியர்களின், மாணவர்களின் நிகழ்வுகள், அதிதிகள் உரை என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வின் ஓர் சிறப்பு அம்சமாக இடமாற்றம் பெற்று முதலைக்குடா மகா வித்தியாலயத்துக்கு செல்லவுள்ள நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தின் அதிபர் திரு.த கோபாலபிள்ளை அவர்கள் பற்றிய அவரது கடந்த கால கல்வி சேவையைப் பாராட்டும் வகையில் அமைந்த ஆவண படம் ஒன்றும் பழைய மாணவர்கள, பெற்றோர்கள், மாணவர்களால் தயாரிக்கப்பட்டு காண்பிக்கப்பட்டது. அத்துடன் அவருக்கான கௌரவிப்பும் வழங்கப்பட்டது. 

பழைய மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு தங்களது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி நிகழ்வை சிறப்பித்தனர். இதுவும் இந்நிகழ்வின் ஒரு முக்கிய அம்சம் என்று கூறலாம்.