ரவிப்ரியாபட்டிருப்பு கல்வி வலயத்தைச் சோந்த போரதீவு பற்று கோட்டத்தில் உள்ள ஆனைகட்டியவெளி;. நாமகள் வித்தியாலயத்தில் திங்களன்று அதிபர் ஜே.ஜெயகரன் தலைமையில் சர்வதேச சிறுவர் தின விழா நடைபெற்றது.
மாணவர்களின் பேரணியைத் தொடர்ந்து அதிதிகள் வரவேற்கப்பட்டு சர்வதேச சிறுவர் தின விழா ஆரம்பமானது. ; பிரதம விருந்தினர்களாக மட் அம்பாறை மாவட்ட விபுலானந்தா சமூக மேம்பாட்டு அமைப்பின் ஸ்தாபகர் க.யோகராஜா லண்டன் காசிப்பிள்ளை நலிவுற்றோருக்கான அமைப்பு சார்பாகவும் மற்றும் பட்டிருப்பு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர்களான செ.சுரேஸ் மற்றும் ஜெயசீலன் ஆகியோரும். பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் விசேட விருந்தினராகவம் கலந்து கொண்டனர்.
மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகியது. மாணவர்களின் கவிதைஇ விழிப்புணபுவூட்டும் பிரதேசத்திற்குப் பொருத்தமான நாடகம் பேச்சு என்பன மாணவர்களின் பங்களிப்பாக நிகழ்வை அலங்கரித்தன. அதிபர் மற்றும் ஆசிரியாகள் பிரதம விருந்தினர்கள் உரையும் சிறப்பாக இடம்பெற்றன. அதனைத் தொடாந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மட் அம்பாறை மாவட்ட விபுலானந்தா சமூக மே;பாட்டு அமைப்பின் ஸ்தாபகர் க.யோகராஜா மாணவர்களுக்கு லண்டன் காசிப்பிள்ளை நலிவுற்றோருக்கான அமைப்பு சார்பாக பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார்;
அதிபர் தனது தலைமையுரையில் மாணவர்களின் ஒழுங்கீனமான பாடசாலை வரவு குறித்து ஆதங்கப்பட்டார். ஒரு பிள்ளை பெற்றோரால் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பதை சினிமாபாடல் பாடி வலியுறுத்தினார்.
பிரதம விருந்தினர் கே.யோகநாதன் இங்கு கற்பித்தலில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் சேவையை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். அவர்கள் கடவுளுக்குச் சமமானவர்கள் என்று குறிப்பிட்டார். மிகவும் பிரயாணக் கஷ்டங்கள் நிறைந்த இந்தப் பாடசாலைக்கு 10,15 கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருந்து உரிய நேரத்திற்கு வருகை தந்து கற்பித்தலில் ஈடுபடுவது பாராட்டுக்குரியது என்றும் குறிப்பிட்டார். அத்துடன் விழா ஒழுங்கமைப்பில் அவர்கள் ஒற்றுமையாகச் செயற்பட்டதும் மகிழ்சிக்கரிய விடயம் என்று குறிப்பிட்டார். அதேபோல் மாணவர்களும் சிறந்தவர்களாகவே காணப்படுகின்றார்கள் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் அவ்வை பாட்டியை நினைவூட்டுவதுபோல் பாடசாலை வளாகத்தில் அதிதிகளால் நெல்லிமர கன்றுகளும் நட்டுவைக்கப்படடன.










































