கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலய சின்னம் சூட்டும் நிகழ்வு


(மே.சண்முகராஜா)
மட்/ கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலய மாணவர் தலைவர்களுக்கான சின்னம்
சூட்டும் நிகழ்வு (03.10.2018) புதன்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வின்போது மாணவர் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு சின்னங்கள் அணிவிக்கப்பட்டதுடன் .மாணவர் தலைவர்களுக்கான
ஒழுக்க விதிக்கோவையும் வழங்கப்பட்டது.

சின்னம் அணிவிக்கப்பட்ட மாணவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து தமது உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர்.புதிதாக கடமையேற்றுள்ள அதிபர் திரு.வி.கோபாலப்பிள்ளை அவர்கள் காலத்தில் இவ்வாறான நிகழ்வுகழ் நடத்தப்படுவது பாடசாலையில் மாணவர்களின் ஆற்றலை வளப்படுத்துவதாக அமைகின்றது.