
மட்/பட் /மண்டூர் 13 விக்கினேஸ்வரா மகா வித்தியாலய ஆசிரியர் புத்திசிகாமணி சிறிகாந் அவர்களுக்கு 05.10.2018 ம் திகதி குரு பிரதீபா பிரபா விருது பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இவர் கடந்த 10 வருடங்களாக இப்பாடசாலையில் சேவையாற்றி வருகின்றார். இவர் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் இந்து சமயப் பாடத்தில் பயிற்சி பெற்று 05 வருடங்கள் கேகாலை தெய்யோவிட்ட நிவ்யொட்டகம தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராகவும் மற்றும் நிறைவேற்று அதிபராகவும் கடமையாற்றி பின்னர் 2008 ஆம் ஆண்டிலிருந்து மட்/பட் /மண்டூர் 13 விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் சித்திரம் இந்துசமயம் ஆகிய பாடங்களைக் கற்பித்து வருகின்றார்.
இவர் க/பொ/த (சா.த), க/பொ/த (உ.த) ஆகிய வகுப்புக்களுக்கு சித்திரப்பாடத்தில் தொடர்ச்சியாக 04 வருடங்கள் 100மூ சித்தியினை மாணவர்கள் பெறுவதற்கு இரவு பகல் எனப் பாராது மாணவர்களைப் பயிற்றுவித்து வந்துள்ளார். இதன்மூலம் ஒவ்வொரு வருடமும் குறிப்பிடத்தக்க மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றுகொண்டிருக்கிறார்கள். இவர் எமது பாடசாலைக்குக் கிடைத்த பெரும் சொத்தாகும்.உண்மையிலேயே அவர் இந்த விருதிற்கு தகுதியானவர் என்பதில் சந்தேகமில்லை.
இவை மட்டுமன்றி இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்போட்டியில் தேசியமட்டம் வரை சென்று தொடர்ச்சியாக பரிசில் பெற்று வருகின்றார்கள். அத்தோடு அதிமேதகு ஜனாதிபதியிடமிருந்தும் பரிசில் பெற்றிருக்கின்றார்கள். இவை அனைத்திற்கும் மாணவர்களைப் பயிற்றுவித்து வழிப்படுத்தி வருகின்ற இவரை சங்சர்புரம் அமைப்பினர் பழைய மாணவர்கள், நியூ ஸ்டார் விளையாட்டுக்கழகத்தினர,; கிராமமக்கள் அனைவரும் வாழத்துகின்றோம்.













