தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி சிதர் தேங்காய் உடைத்து திருக்கோவிலில் பேரணி
(எஸ்.கார்த்தி)
இலங்கை அரசினால் எந்தவொரு விசாரணைகளும் இன்றி மிக நீண்ட காலமாக சிறைவாசம் அனுபவித்து உறவுகளை பிரிந்து கொடுமைகளை அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி திருக்கோவில் பிரதேசத்தில் பேரணியும், கையெழுத்து வேட்டையும் இன்று சனிக்கிழமை(13) இடம்பெற்றது.
இவ் பேரணியானது அம்பாறை திருக்கோவில் வெட்டுக்குளத்துப் பிள்ளையார் ஆலயத்தில் கற்பூரம் ஏற்றி சிதர்தேங்காய் உடைத்து வழிபாடு செய்து பேரணியாக திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரம் வரை செய்று அங்கு கையெழுத்து வேட்டையும் கூட்டமும் இடம்பெற்றது.
இவ் பேரணியை அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் மற்றும் திருக்கோவில் பிரதேச பொது மக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இப் பேரணியில் சர்வதேசமே எமது அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு உதவி செய், அரசியல் கைதிகள் அனைவரும் தமது குடும்ப உறவுகளுடன் சேர்ந்து வாழ தமிழ் அரசியில் வாதிகள் ஒன்றினைந்து நல்லாட்சி அரசிடம் கோரிக்கை விடுங்கள், நல்லாட்சி அரசே உயிருக்கு போராடும் கைதிகளை விடுதலை செய் போன்ற சுலோக அட்டைகளை தாங்கியவாறு பேரணியில் சுமார் 150க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு தமது தமிழ் அரசியில் கைதிகள் மற்றும் யாழ்பல்கலைக்கழக மாணவர்களின் பேரணிக்கும் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டு இருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி குட்டிமணி மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்க தலைவி த.செல்வராணி ஆகியோர் கருத்து தெரிவிக்கையில் விசாரணை இன்றி சிறைக்குள் வாடும் தமிழ் அரசியில் கைதிகள் உடனடியாக விடுதலை செய்ப்பட வேண்டும் போராட்டத்திற்கு ஆயுதங்கள் விநியோகித்தவர்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் படைகளுக்கு தளபதிகளாக இருந்து கட்டளைகளை இட்டவர்களான கருணா அம்மான், கே.பி போன்றோர் இன்று அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட:டு சுகபோக வாழ்கை வாழ்ந்து வரும் நிலையில் கட்டளைகளை கேட்டு செய்த சிற்பாய்களை சிறைகளில் அடைத்து வைத்திருப்பது என்ன நியாயம்.?
இவர்களை உடனடியாக விடுதலை செய்து கைதிகளும் பந்தபாசம் உணர்வுகள் கொண்டவர்கள் அவர்களும் தமது குடும்பங்களுட்ன் தாய்,தந்தை, மனைவி,குழந்தைகளுடன் இறுதி காலத்தை மகிழ்சியாக வாழ்வதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் சந்தர்ப்பத்தினை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


















