மண்டூர் சங்கர்புரம் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும் “தூபிகை” சிறப்பு மலர் வெளியீடும்

 மண்டூர் சங்கர்புரம்  விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும் “தூபிகை” சிறப்பு மலர் வெளியீடும்




 மண்டூர் சங்கர்புரம்  விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும் “தூபிகை” சிறப்பு மலர் வெளியீடும் நிகழ்வானது வித்தியாலயத்தின் அதிபர் திரு. ரீ. சபேசன் அவர்களின் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் 05.11.2018 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகியது.


இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக  கிழக்கு மாகாண கல்வி அமைச்சின்  சிரேஷ்ட பிரதிச் செயலாளர்   வெ.தவராசா அவர்களும் சிறப்பு அதிதியாக பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.ஆர்.சுகிர்தராஜன்  அவர்களும் அதி விசேட அதிதியாக போரதிவுப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் திரு.என்.புவனேந்திரன் அவர்களும் விசேட அதிதிகளாக போரதீவுப்பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.ரி.அருள்ராசா, தெஹியத்தகண்டி உதவிப் பிரதேச செயலாளர் திரு.எஸ்.பார்த்தீபன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.எ.சுதாகரன் , உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.கு.திருச்செல்வம் , உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.என்.நேசகஜேந்திரன் , அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி  விரிவுரையாளர் திரு.எஸ்.தசரதன் , பிரதேச சபை உறுப்பினர்  திரு.ரி.மனோகரன் , நாவிதன்வெளி இலங்கை வங்கி முகாமையாளர் திரு.கே.சசிதரன் ஆகியோர்  இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் 2012 – 2017 வரையான காலப்பகுதியில் வலயமட்ட, மாவட்டமட்ட, மாகாணமட்ட மற்றும் தேசிய மட்ட போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டதோடு “தூபிகை” பரிசளிப்பு விழா சிறப்பு மலர் வெளியீடும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் அனைவரும் அதிகஷ்ட பிரதேசத்தில் அமைந்துள்ள இப் பாடசாலை மாணவர்களின் திறமைகளைப் பராட்டியதோடு இம் மாணவர்களின் திறமைகளை மேலும் வெளிக்காட்டுவதற்கு தடையாக அமைந்துள்ள பௌதிக வளப் பற்றாக்குறையினையும் நிவர்த்திப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தனர். அத்தோடு இவ்விழாவானது நகர்ப்புறப் பாடசாலைக்கு ஒப்பான ஒரு விழாவைப்போல் சிறப்பாக திட்டமிட்டு நடாத்திய அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள், பாடசாலைச் சமூகத்தினருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.