மட்டுநகர் சிவாநந்த தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் வைரவிழா சிறப்பு நிகழ்வுகள் மற்றும் 60வது பொதுக்கூட்டம் என்பன எதிர்வரும் 25-11-2018 ஞாயிற்றுக் கிழமை காலை 8.30 தொடக்கம் பாடசாலை கலையரங்கில் இடம்பெறவுள்ளன.
சங்கத்தின் தலைவர் திருவாளர் மு.முருகவேள் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளுக்கு சிவாநந்தா பழைய மாணவர்கள ;அனைவரும் அழைக்கப்படுகிறார்கள்.
அறுபதாவது ஆண்டைக் கொண்டாடும் முகமாக சிரேஸ்ட சிவாநந்தியர்களுக்கிடையிலான சிறப்புப் பட்டிமன்றம், சிவாநந்தியர்களின் வாத்திய இசைமுழக்கம், சிறப்பு மலர் வெளியீடு, சுவாமி விபுலாநந்தர் கீதங்கள் அடங்கிய இறுவட்டு வெளியீடு, ஆவண குறுந்திரைப்பட வெளியீடு, அங்கத்தவர் விலாசக் கையேடு வெளியீடு என்பனவும் இடம்பெறவுள்ளன. வைரவிழாவில் கலந்துகொள்பவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்படவுள்ளன.
உலகெலாம் பரந்துவாழும் சிவாநந்தியர்கள் நேரடி ஒளிபரப்பை கண்டுகளிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. Battinews இன் சிறப்பு ஏற்பாட்டில் நேரடி ஒளிபரப்பு இடம்பெறும்.
அனைத்து சிவாநந்தியர்களும் வைரவிழா நிகழ்வுகள் மற்றும் வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டப்படுகிறார்கள்.
மேலதிக தகவல்களுக்கு சங்கத்தின் பொதுச் செயலாளரைத் தொடர்பு கொள்ளலாம்
சு.பவாநந்தராஜா - 0773760097













