சிவாநந்தா பழைய மாணவர் சங்க வைரவிழா சிறப்புப் பட்டிமன்ற நாயகர்கள்: நாளைய நிகழ்வுக்கு அனைத்து சிவாநந்தியர்களும் அழைக்கப்படுகிறார்கள்



சிவாநந்தா பழைய மாணவர் சங்கத்தின் வைரவிழா நாளை காலை எட்டு மணிக்கு இராமகிருஷ்ண மிஷனில் இடம்பெறும் விசேட ஆராதனையுடன் ஆரம்பமாகவிருக்கின்றது.  மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தஜீ மஹராஜ் அவர்களின் ஆசீர்வாதம் மற்றும் பேருரையுடன் சங்கத்தின் தலைவர் திருவாளர் மு.முருகவேளின் தலைமையில் இடம்பெறவிருக்கும் விழாவில் பல சிறப்பு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. 

சிரேஸ்ட சிவாநந்தியர்களுக்கிடையிலான சிறப்புப் பட்டிமன்றம் மிகுந்த எதிர்பார்புகளுக்கு மத்தியில் அரங்கை அதிரவைக்க இருக்கின்றது. சிவாநந்தாவின் முன்னைநாள் பட்டிமன்ற நாயர்களின் சொற்கணைகள் அரங்கிலே ஒலிக்கவிருக்கின்றன. கிழக்கு மாகாணத்தில் பிரபல்யம் பெற்று விளங்கும் பட்டிமன்ற நாயகர்களாகவும் இவர்கள் திகழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

தலைப்பு: நற்பிரஜைகளை உருவாக்குவதில் பங்களிப்புச் செய்வது ஒழுக்கமே....! கல்வியே....!

ஒழுக்கமே எனும் குழுவில்

அல்காஜ் மஹ்றூப் ஹரீம் ( முன்னாள் அதிபர்) அவர்களின் தொகுப்பில்

திருவாளர் வி.ரி.சகாதேவராஜா ( உதவிக் கல்விப் பணிப்பாளர்)
திருவாளர் ரவீந்திரமூர்த்தி ( முன்னாள் அதிபர்)
திருவாளர் க.வரதராஜன் ( உதவிக் கல்விப் பணிப்பாளர்)

கல்வியே எனும் குழுவில்

திருமதி திலகவதி ஹரிதாஸ் (முன்னாள் அதிபர்) அவர்களின் தொகுப்பில்

வைத்திய கலாநிதி வரணிதரன் (சிரேஸ்ட சத்திர சிகிச்சை நிபுணர்)
திருவாளர் விமலதாசன் ( வங்கி முகாமையாளர்)
திருவாளர் கோ.குகன் ( சிரேஸ்ட தமிழ்த் துறை விரிவுரையாளர்)


மேலும் பிரதீபன் சிற்சபேன் குழுவினரின் பல்லிசைக் கதம்பம் கண்களுக்கு விருந்தளிக்கவிருக்கிறது. 

சிவாநந்தயுகம் எனும் சிறப்பு மலர் வெளியீடு, சிவாநந்த ஆவணப்பட வெளியீடு, கனடாவாழ் சிவாநந்தியன் கே.எஸ் பவான் அவர்களின் தயாரிப்பு மற்றும் அனுசரணையில் சங்கத்தால் வெளியிடப்படும் ' வெள்ளை மலர்' இறுவெட்டு, மற்றும் பல நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெறவுள்ள வைரவிழாவுக்கு அனைத்து சிவாநந்தியர்களும் அழைக்கப்படுகின்றனர்.

நாளைய நிகழ்வில் பங்குபற்றும் அனைத்துச் சிவாநந்தியர்களுக்கும் வைரவிழா நினைவுச் சின்னம் மற்றும் வைரவிழா மலர், இறுவெட்டு என்பன வழங்கப்படவுள்ளன. 

அனைவரும் காலை 8.00 மணிக்கே வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


வைரவிழா ஏற்பாட்டுக் குழு.