வெளியாகியுள்ள 2018 ஆண்டுக்கான உயர்தர பரீட்சை முடிவுகள் அடிப்படையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் முஹம்மது ஹிதாயதுல்லாஹா பாத்திமா சுக்ரா என்ற மாணவி விஞ்ஞான பிரிவில் பரீட்சைக்கு தோற்றிவித்து மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தினையும் தேசிய ரீதியில் பத்தாம் இடத்தினையும் பெற்றுள்ளார்
குறித்த மாணவி மாவட்ட மட்டத்தில் முதல் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கும் கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ள மாணவியை பாடசாலை அதிபர் ,ஆசிரியர்கள் , பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றனர்
இதேவேளை இப்பாடசாலையில் மருத்துவத்துறைக்கு நான்கு மாணவர்களும், பொறியியல் துறைக்கு இரண்டு மாணவர்களும் , வர்த்தக துறைக்கு பணிரெண்டு மாணவர்களும் , தொழிநுட்ப துறைக்கு எட்டு மாணவர்களும் , கலைத்துறைக்கு இரண்டு மாணவர்களும் மற்றும் ஏனைய துறைகளுக்கு 20 மாணவர்களும் தெரிவாகியுள்ளதாக பாடசாலை அதிபர் எஸ் எ . நஜீப் தெரிவித்தார்














