
(மே.சண்முகராஜா)
மட்/கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலய போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கடந்த 24.01.2019 வியாழக்கிழமை இடம்பெற்றது. கிரான்குளம் கிராமத்தின் ஊடாக சென்று பிரதான வீதியை அடைந்து பின்னர் மட்./கிரான்குளம் கணபதிப்பிள்ளையார் ஆலய முன்றலில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றினை நிறைவாகக்கொண்டு ஊர்வலம் நிறைவடைந்தது.
மேன்மை தங்கிய ஜனாதிபதியின் வேண்டுதலுக்கு அமைய பாடசாலைகளில் இடம் பெற்ற போதைப்பொருள் தடுப்புவாரத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்த ஊர்வலம் இடம் பெற்றது.பாடசாலையின் அதிபர் திரு வி.கோபாலப்பிள்ளை அவர்களின் வழிகாட்டலில் இடம் பெற்ற இவ் ஊர்வலத்தில் மண்முனைப்பற்று கோட்டக்கல்விப்பணிப்பாளர் திருவாளர் நல்லதம்பி அவர்கள், பிரதேச வைத்திய அதிகாரி டொக்டர் ரமேஷ், பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்
மாணவர்கள் போதைப்பொருள் தடுப்பு சுலோகங்களை உரத்து சொல்லிச் சென்றதுடன் பதாகைகளையும் எடுத்துச் சென்றனர்.
















