குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலத்தில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி



(சித்தா)


மட்/குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலத்தில் 2019ஆண்டிற்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த 11.02.2019 ஆம் திகதி பாடசாலை விளையாட்டு மைதானத்தில் அதிபர் திரு. ஆ.சிவசம்பு தலைமiயில் நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் அவர்கள் கலந்து விளையாட்டு விழாவினைச் சிறப்பித்தார்.


அத்துடன் மன்முனை தென் எருவில் பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.த.அருள்ராசா. உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.த.இதயகுமார், ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன். ஆகியோர் விசேட அதிதிகளாகவும், சிறப்பு அதிதியாக குருக்கள்மடம் இராணுவமுகாம் பொறுப்பதிகாரி மேஜர் இகுவாங் எகலபொல கலந்து விளையாட்டு விழாவினை மேலும் மெருகூட்டினர்.


வுpளையாட்டு விழாவில் அணிநடை, குறுந்தூர ஓட்டங்கள், அஞ்சல் ஓட்டங்கள், சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், சிறப்பாக உடற்பயிற்சிக் கண்காட்சி என்பன இடம்பெற்றன.