மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் 2019ம் ஆண்டிற்கான புதிய நிருவாக தெரிவு கூட்டம்

 


மண்முனை வடக்கு பிதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் 2019ம் ஆண்டிற்கான புதிய நிருவாகம் தெரிவு செய்யும் கூட்டமானது மட்/இந்துக் கல்லூரி பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நேற்று 2019.02.24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரதேச இளைஞர் உத்தியோகஸ்த்தர் ர.பிரவீண் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் சு.ஸஜித் தலைமையில் இடம்பெற்றது.


 இக் கூட்டத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி.நிசாந்தி அருள்மொழி, முன்னால் இளைஞர் பாராளுமன்ற உறுபினரும் முன்னால் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவருமான E.J.பயஸ்ராஜ், மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் தேசிய ஒருமைப்பாடு ஒருங்கிணைப்பாளர் N.துஜோகாந் ஆகியோரும் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.


 இதன் போது செல்வன்.E.J.பயஸ்ராஜ் அவர்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக ஆற்றிய மாபெரும் பணிகளை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச்சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது. மேலும் இக் கூட்டத்தில் கடுமையான போட்டிக்கு மத்தியில் 2019ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர். 

அந்த வகையில் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் புதிய தலைவராக சு.ஸஜித் செயலாளராக ர.பிரவீண்(இளைஞர் சேவை உத்தியோகஸ்த்தர்) உப-செயலாளராக T.ரிஷோத்திரி பொருளாளராக A.S.சதுஸ்கன் அமைப்பாளராக T.பிரதீபன் உப-தலைவராக S.சதீஷ்குமார் உப-அமைப்பாளராக S.சௌமியா

 விளையாட்டு பிரிவிற்கான செயலாளராக P.டிமோசன் கலாசார பிரிவிற்கான செயலாளராக I.செந்தூரன் முயற்சியான்மை பிரிவிற்கான செயலாளராக S.லவன்ராஜ் ஊடகம் மற்றும் தகவல் பிரிவிற்கான செயலாளராக V.ஜெருசன் தேசிய சேவை பிரிவிற்கான செயலாளராக K.ஜதுசனா கல்வி பிரிவிற்கான செயலாளராக அனோஜன் நிதி பிரிவிற்கான செயலாளராக T.தனுஸ்கர் சூழல் பாதூகாப்பு பிரிவிற்கான செயலாளராக R.ரமேஸ்ராஜா கணக்காய்வாளராக A.நிதர்சன்


ஒழுக்காற்று குழு உறுப்பினர்களாக டினோஜன், v.யுட்சாந்த, T.தேவயாழினி, K.அனோஜா, S.திவ்வியாசினி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.