
ஆரையம்பதியைச் சேர்ந்த திருமதி.நல்லம்மா-பூபாலரட்ணம் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவையொட்டி இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச கண் சத்திர சிசிச்சை முகாம் இன்று(2) காலை 8 மணிக்கு மட்டக்களப்பு ஆரையம்பதி நந்தகோபன் கலாச்சார மண்டபத்தில் ஆரம்பமானது.
கண் வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி பூபாலரட்ணம் ஸ்ரீகரநாதன் அவர்கள் தலைமையிலும் ஏற்பாட்டிலும் நடைபெற்ற இம்முகாமில் அதிதிகளாக மாநகர சபை தலைவர் தி.சரவணபவன்,ஆரையம்பதி பிரதேச சபை தலைவர் எஸ்.மகேந்திரலிங்கம் மற்றும் இராமகிருஷ்ண மிஷன் உறுப்பினர் பத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மாநகர சபைத்தலைவர் இம்முகாமை ஆரம்பித்து வைத்தார்.
இலவச வைத்தியமுகாமில் நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கான கண் சத்திர சிசிச்சை மட்டக்களப்பு G V தனியார் வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.




















