(சசி)
சர்வதேச கராத்தே பயிற்சி வகுப்பு 2019-02-24 ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு YMCA மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சிஹான் Shosukie Otani (7th Dan Black Belt), இலங்கையைச் சேர்ந்த சிஹான் UL Lalith (6th Dan Black Belt), Sensei Munasinghe (2Dan Black Belt), Tilak Kumara (2nd Dan Black Belt) ஆகியோர் பயிற்சி வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
இதில் 150 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பற்றியதுடன் இச் சர்வதேச கராத்தே பயிற்சி வகுப்பினை எமது பகுதி மாணவர்கள் பயன்பெறும் பொருட்டு UKRA பிரதம போதனாசிரியரும் தலைவருமான சிஹான் K.Ravichandran மற்றும் SLKRA பிரதம போதனாசிரியரும் தலைவருமான சிஹான் K.Kuhakumararajah அவர்களாலும் ஒழுங்கு செய்யப்பட்டது.
இதனை சிறப்பிப்பதற்காக RKO பிரதம போதனாசிரியரான சிஹான் T.K Kendramoorthy, RKO செயலாளர் சிஹான் செய்னுலாப்தீன், RKO ஆலோசகர் சிஹான் சந்திரலிங்கம், RKO சிரேஸ்ட போதனாசிரியர்கள் தருமலிங்கம் சுரேஸ், மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஆசிரியர்கள், பெற்றார்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.







































