மணல் அகழ்விற்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்




கனகராசா சரவணன்

மட்டக்களப்பு வாகனேரி முள்ளிவட்டுவான் பிரதேசங்களில் சட்டவிரோதமாக மணல் கொள்ளைக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் இன்று புதன்கிழமை கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்றது.

தாய்நிலத்தின் மண்ல் கொள்ளையர்களால் சட்டவிரோதமாக மணல் அகழ்வுக்கு எதிராக வாகனேரி முள்ளிவட்டுவான் பிரதேச மக்கள் ஒன்றினைந்து ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

இதனையடுத்து நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றினைந்து கோறைளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்திற்கு முன்னாள் ஒன்றினைந்த பொதுமக்கள் கடந்த 2009 ம் ஆண்டுவரை பாதுகாப்பாக இருந்த எமது தாய் நிலத்தின் இயற்கை வளத்தினை அழித்து அப்பிரதேசத்தை மனிதர்கள் வாழமுடியாத பாலைவனமாக்க துடிக்கும் மணல் கொள்ளையர்களும் அவர்களுக்கு துணைபோகும் அரசியல் அரச வியாபாரிகள் ஒழிக? மணலை அள்ளி மக்களை புதைகுழியில் தள்ளாதே,
ஆரசியல் வாதிகளே எமது வளங்கள் மீது கவனமெடு. அனுமதியின்றி மண்ணை அள்ளாதே , இயற்கை வளமான மண்ணை அனுமதியின்றி அகழ்வு செய்து வெளிப் பிரதேசங்களுக்கு ஏற்றுமதி செய்யாதே போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பிரதேச செயலக அதிகாரியிடம் மகஜர் ஒன்றை கையளித்து அங்கிருந்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.