வின்சன்ட் தேசிய பாடசாலையில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் மாதிரி சந்தை



துறையூர் தாஸன்.

புதிய பாடத்திட்டத்திற்கமைவான ஆரம்ப பிரிவு மாணவர்களின் மாதிரி சந்தை மட்டு  வின்சன்ட் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நேற்று (26) இடம்பெற்றது.

கல்லூரியின் முதல்வர் திருமதி ஹரின்யா சுபாகரன் தலைமையிலான இந்நிகழ்வில், வலயக்கல்வியலுவலக ஆரம்பக் கல்விப் பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி உ.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண செலான் வங்கியின் பிராந்திய முகாமையாளர் திருமதி ப.இளங்கோ விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பித்தார்.

மாதிரி சந்தையில் பெருமளவான ஆசிரியர்கள் ,மாணவர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் நிறைவான

பொருட்களை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக இருந்ததுடன் சந்தை என்ற உணர்வினை எல்லோர் மத்தியிலும்  ஏற்படுத்தியிருந்த தென்பதும் குறிப்பிடத்தக்கது.