
மட்டக்களப்பு மாநகர சபையினால் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற சிறுவர்களின் போசாக்கு தன்மையை அதிகரித்தல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கையினை மேம்படுத்தல் ,பெண்களுக்கான சுயதொழில் மற்றும் நகரை முதன்மை படுத்தும் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
இதன் கீழ் மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள குடும்பங்களில் மூன்றாவது குழந்தையாக பிறக்கின்ற குழந்தைகளுக்கு மாதாந்தம் ஐயாயிரம் ரூபா வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது .
இந்த கொடுப்பனவினை பெற்றுக்கொள்வதாயின் 01.01.2019 ஆம் திகதிக்கு பின்னர் பிறந்த மூன்றாவது குழந்தையின் விபரங்களை மாநகர சபையின் பிரதி முதல்வரின் ஊடாக வழங்கப்படும் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து , கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் குடும்பநல வைத்திய அதிகாரியின் அத்தாட்சிப்படுத்தளுடன் ஆவணங்களை சமர்பிக்கும் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் மற்றும் பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் ஆகியோர் அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்












