சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் 125வது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வு



(சசி)
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் 125வது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வு 23.03.2019 சனிக்கிழமை கிரான்குளம் சீமூன் காடின் மண்டபத்தில்   புதுக்குடியிருப்பு சமூக நலன்புரி அமைப்பினது உப தலைவரது தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக சென்னை காஞ்சிபுரம் இராமகிருஷ்ண மடத்தினது தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஆத்மகனாநந்தஜீ மகராஜ் அவர்களும். ஆத்மீக அதிதிகளாக கல்லடி இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தஜீ மகராஜ் அவர்களும், ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ மகராஜ் அவர்களும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் ஆத்மீக நிகழ்ச்சிகள் திலகவதியார் மகளிர் இல்ல மாணவிகள் மற்றும் புதுக்குடியிருப்பு விவேகானந்தா தொழில்நுட்பவியல் கல்லூரி மாணவர்களால் நிகழ்த்தப்பட்டதுடன். இதன் பிரதான அம்சமாக சுவாமி விவேகானந்தரின் குறும் திரைப்படம் காண்பிக்கப்பட்டது, அத்துடன் சுவாமிகளது நினைவுப் பேருரையினது தாற்பரியம் பற்றியும் அவரது சமூக குறிக்கோள், இலட்சியம் பற்றியும் தத்துவார்த்த அம்சங்களைக் கொண்ட சொற்பொழிவுகள் இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகளால் ஆற்றப்பட்டது.

மேலும் நிகழ்வில் 10 ஏழை மாணவர்களை தெரிவு செய்து அவர்களது கல்வி நடவடிக்கைகளுக்காக துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.