ஸ்ரீ இராமகிருஷ்ணரின் 184வது ஜயந்தி தின நிகழ்வு



பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் 184வது ஜயந்தி தின நிகழ்வு 24.03.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த மண்டபத்தில்  கல்லடி இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தஜீ மகராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இறைவணக்கம் சாரதா இல்ல மாணவிகளால் இசைக்கப்பட்டதுடன், அறிமுக உரையினை இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ மகராஜ் அவர்களும், இராமகிருஷ்ணர் பற்றிய சிறப்பு உரையினை சென்னை காஞ்சிபுரம் இராமகிருஷ்ண மடத்தினது தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஆத்மகனாநந்தஜீ மகராஜ் அவர்களும் வழங்கினார்கள்.
ஆத்மீக அம்சங்கள் அடங்கிய நடன நிகழ்வுகள் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்தினர் மற்றும் இராமகிருஷ்ண மிஷன் அறநெறிப் பாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்டன.

பகவான் இராமகிருஷ்ணர் விவேகானந்தரைப் போன்று பல ஞானிகளையும், சமூக முன்னேற்றத்திற்காக உழைக்கும் பல ஒழுக்க சீலர்களையும் உருவாக்கிய தெய்வீக அவதாரம். ஆத்மார்த்தமாய் என்றும் உயிர்ப்போடு இருக்கும் இராம கிருஷ்ணரின் பிறந்த நாளினை உலகெங்கும் உள்ள மக்கள் அனுட்டிக்கின்றனர்.