திருக்கோவில் கல்வி வலயத்தின் வலய மட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்வு






(சுகிர்தகுமார் )
திருக்கோவில் கல்வி வலய மட்ட விளையாட்டு விழா வலயக்கல்விப்பணிப்பாளர் வை.ஜெயச்சந்தரன் தலைமையில் வலய அலுவலக உத்தியோகத்தர்களின் பங்களிப்போடு  (15)சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் மற்றும் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன் திருக்கோவில் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.சதாத் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் பி.மோகனகாந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அதிதிகள் வரவேற்பினை தொடர்ந்து பிரதம அதிதி தேசிய கொடியினை எற்றி வைத்தார். பின்னர் வலய மற்றும் பாடசாலை கொடிகளும் எற்றிவைக்கப்பட்டன. நிகழ்வில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டதுடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

இந்நிலையில் குறித்த விளையாட்டு விழாவில்  பல பாடசாலைகளை புள்ளிகள் அடிப்படையில் புறந்தள்ளிவிட்டு பின் தங்கிய பொத்துவில் மெதடிஸ்தமிசன் பாடசாலை முதலிடத்தையும் தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயம் இரண்டாமிடத்தினையும் திருக்கோவில் மெதடிஸ்த மத்திய மாகாவித்தியாலயம் மூன்றாவது இடத்தினையும் பெற்றுக்கொண்டது.

அத்தோடு மிகவும் பின்தங்கிய தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயம் ஆண் மற்றும் பெண்களுக்கான அணிநடையில் முதலிடத்தையும்  வான்ட் வாத்தியம் போன்ற நிகழ்வுகளிலும் விளையாட்டு நிகழ்வுகளிலும் பங்கேற்று இரண்டாவது இடத்தினையும் பெற்றுக்கொண்டமையானது பாராட்டுவதற்குரியதாக அமைந்தது.

இதேவேளை இங்கு இடம்பெற்ற அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மாணவிகளின் உடற்பயிற்சி கண்காட்சியும் ராம்கராத்தே சங்கத்தின் மாணவர்களின் கராத்தே கண்காட்சியும்  அனைவரது பாராட்டையும் பெற்றது. ஆனாலும் வலயமட்ட விளையாட்டு ஆரம்பம் முதல் இறுதிவரை தேசிய பாடசாலைகள் என எப்பாடசாலைகளையும் குறிப்பிடாமையும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இறுதியில் இடம்பெற்ற அணிநடை மரியாதையினை அதிதிகள் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து ஓய்வு பெற்ற உடற்பயிற்சி உதவிக்கல்விப்பணிப்பாளர் செல்வராஜா பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்.

தொடர்ந்து வெற்றி பெற்ற சம்பியன்களுக்கான வெற்றிக்கிண்ணங்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

இங்கு உரையாற்றிய மாகாண கல்விப்பணிப்பாளர்

இவ்விளையாட்டு போட்டியினை விழாவாகவே நான் பார்க்கின்றேன். இதில் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை கொப்பி பண்ணுவதற்கே அதிகம் உள்ளது. இங்கிருந்து பல புதிய விடயங்களையும் நான் கற்றுக்கொண்டேன். அந்த அளவிற்கு மிகவும் சிறந்த முறையில் போட்டிகளின் ஒழுங்குகள் இடம்பெற்றுள்ளன என அனைவரையும்