மட்டக்களப்பு வின்சன் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவிற்கான பரிசளிப்பு விழா

(வரதன்)

மட்டக்களப்பு மாவட்ட பிரபல பெண்கள் பாடசாலையான வின்சன் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவிற்கான பரிசளிப்பு விழா இன்று பிற்பகல் பாடசாலை அதிபரான திருமதி.க.சுபாகரன் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் கலந்து சிறப்பித்ததோடு சிறப்ப அதிதியாக மட்டு வலயக் கல்விப்பணிப்பாளர் வி.மயில்வாகனம் அவர்களும் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி கீர்த்திகா மதனளகன் மற்றும் ஆரம்பப்பிரிவு பிரதி கல்விப் பணிப்பாளர் திருமதி.யு.விவேகானந்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்விற்கு பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.இங்கு மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.