சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியத்தால் பொது குடிநீர் வசதி.




ஏறாவூர் சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியம் ஸக்காத் கிராம மக்களின் தேவையை கருத்தில் கொண்டு அப்பிரதேசத்தில் பொதுமக்கள் பாவனைக்காக பொது குடிநீர் வசதியை ஏற்பாடு செய்து நேற்றைய தினம் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வு ஒன்றியத்தின் தலைவர் ஜனாப் முகம்மத் பாறூக் தலைமையில் இடம்பெற்றது.நிகழ்வில் ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினரும் சமாதான நீதவானுமாகிய மௌலவி அல்ஹாபில் நாஸர் இஹ்ஸானி அவர்களினால் சொற்பொழிவும்,துஆவும் ஓதப்பட்டது. நிகழ்வுக்கு ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ சீ நஜீம் அவர்களும்,ஒன்றியத்தின் பிரதி தலைவர் ஆரிப் தஸீர், நழீம் உட்பட நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.