
(சசி)
மட்டக்களப்பு சிவாநந்தா பாடசாலையின் வணிக மாணவர் ஒன்றிய அங்குரார்பணம் மற்றும் விருது வழங்கல் வைபவமும் 01.03.2019 அன்று பாடசாலை அதிபர் T.யசோதரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் தலைமை அதிதியாக கொழும்பு வணிக மாணவர் ஒன்றியத்தின் தலைவரும், நிதி முகாமையாளருமான மோகன் சந்திரன் அவர்களும்,
சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலய வணிக பாட ஆசிரிய ஆலோசகர் A.பாலசுப்பிரமணியம் அவர்களும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள உதவி ஆணையாளர் T.குணராஜா அவர்களும், மட்/சிவாநந்தா வித்தியாலய பழைய மாணவர்கள், பழைய வணிக பாட ஆசிரியர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள், வணிக பாட மாணவர்கள், மட்டக்களப்பு வலயத்திற்கு உட்பட்ட ஏனைய பாடசாலையின் வணிக பாட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
சிறப்பான முறையில் இடம்பெற்ற வணிக மாணவர் ஒன்றிய அங்குரார்பணம் மற்றும் விருது வழங்கல் நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நிகழ்வை அலங்கரித்தன.; இந் நிகழ்வில் சிவாநந்தா பாடசாலையின் வணிக மாணவர் ஒன்றியத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் சிறப்பம்சமாகும். சிறப்பு அதிதிகளின் உரைகளுடன்; நிகழ்வானது இனிதே நிறைவு பெற்றது.




















































