இலங்கை மின்சார சபையின் புதிய கட்டிடம் கல்முனையில் திறந்து வைக்கப்பட்டது



இலங்கை மின்சார சபையின் புதிய கட்டிடம்  நேற்று கல்முனையில் திறந்து வைக்கப்பட்டது

நாட்டின் மின்சார சேவையை திறம்பட நம்பிக்கைத் தன்மையுடன் தரமான மின்சார சேவையாக உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனைப் பிரதேசத்தின் மின் பாவனையாளர்களுக்கு மிகவும் சிறப்பான மின்சார சேவையினை வழங்கும் பொருட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்கவின் ஆலோசனைக்கமைய நிர்மாணிக்கப்பட்ட இலங்கை மின்சார சபையின் கல்முனைப் பிரதேச மின் பொறியியலாளர் காரியாலயம் நேற்று திறந்து வைக்கப்பட்டது .

அம்பாறை மாவட்டத்தின் அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் , அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ,மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் எச் எம் எம் .ஹரிஸ் , மின்சக்தி மற்றும் புத்தாக்கல் இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச ஆகியோரின் பங்குபற்றலுடன் மின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது

கல்முனைப் பிரதேச மின் பொறியியலாளர் காரியாலய புதிய கட்டம் திறப்பு விழா நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாகாண சபை உறுப்பினர்கள் , இலங்கை மின்சார சபைகளின் தலைவர்கள் , இலங்கை மின்சார சபைகளின் பொது முகாமையாளர்கள் , இலங்கை மின்சார சபைகளின் மேலதிக பொது முகாமையாளர்கள் , இலங்கை மின்சார சபைககளின் உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் கலந்துகொண்டனர்