பௌர்ணமி கலைவிழா



மு.கோகிலன்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலில் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் பிரதேச பௌர்ணமி கலைவிழா பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது.இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி ஷோபா ஜெயரஞ்சித்,உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

பிரதேசத்தின் பொதுமக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிகளான நாட்டுக் கூத்து,கும்பி,கரகாட்டம்,வில்லுப்பாட்டு, மற்றும் கவியரங்கு என்பன மேடையில் அரங்கேற்றப்பட்டன