(y.சசி)
2018 க.பொ.த (சாதாரண தரப்) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்/ விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவிகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளம் மூலமாக கிடைக்கப்பெற்றுள்ள பெறுபேறுகளின்படி 9A சித்தி 1 மாணவியும், 6 மாணவியர் 8A, B சித்தியினையும் இவை தவிர பல மாணவிகள் சிறந்த பெறுபேறுகளையும் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
மொத்தமாக 166 மாணவியர் க.பொ.த (சா/த) பரீட்சைக்குத் தோற்றி அதில் 130 மாணவியர் (78.3%) உயர்தரம் கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
பிரதான 6 பாடரீதியான சித்தி வீதம்
சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு தற்போதைய அதிபர் திருமதி. P. இராஜகோபாலசிங்கம், முன்னாள் அதிபர் திருமதி. தி.ஹரிதாஸ், பிரதி அதிபர்கள் திரு. ஏ. அமிர்தலிங்கம், திருமதி. P. பிரேமகுமார், உதவி அதிபர் திருமதி. S. சிவலிங்கம் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவை முக்கிய காரணிகளுள் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது.
அனைத்திற்கும் மேலாக 1988 SVSA அமைப்பினரின் அனுசரணையுடன் இடம்பெற்ற பரீட்சைகள், செயலமர்வுகள் மற்றும் ஆங்கிலத்தில் 40இற்கு குறைவான மாணவிகளுக்காக நடாத்தப்பட்ட விசேட வகுப்புக்கள் என்பன மட் /விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவிகளின் க.பொ.த. (சா/த) பெறுபேறுகள் அதிகரிக்கக் காரணமாக இருந்தது. 1988 சிவானந்தா விவேகானந்தா மாணவர் ஒன்றியத்தின் (SVSA) சேவைத்திறன் பாராட்டப்படவேண்டியதே என பாடசாலைச் சமூகத்தினர் நன்றியுடன் தெரிவிக்கின்றனர்.














