மட்டக்களப்பில் நாளை இடம்பெறும் தேசிய கராத்தே சுற்றுப்போட்டி



மறைந்தும் மறையாத மாமனிதர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் சேர் அவர்களின் பெயரில் தேசிய கராத்தேச் சுற்றுப்போட்டியொன்று மட்டக்களப்பு YMCA மண்டபத்தில் 2019.03.31 அன்று காலை 9.00 மணிக்கு நடாத்தப்படவுள்ளது.

இச்சுற்றுப்போட்டியினை SLKRA, UKRA கராத்தேச் சங்கங்களின் பிரதம போதனாசிரியர்களான சிகான் கணபதிப்பிள்ளை குககுமாரராஜா, சிகான் கணபதிப்பிள்ளை இரவிச்சந்திரன் என்போரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுப்போட்டியினை சிறப்பிக்க  சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் மகளும் RKO இன் தலைவருமான சசித்திரா இராமச்சந்தரன் RKO பிரதமபோதனாசிரியர் சிகான் கே.கேந்திரமூர்த்தி,

SLKF  நடுவர் குழு இணைப்பாளர் சிகான் W.A.S.P.J.Medonza, RKO ஆலோசகர் கே.சந்திரலிங்கம், RKO செயலாளர் எம்.பி.செயினுல் ஆப்தீன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ், சிரேஸ்ட கராத்தே போதனாசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.