திருக்கோவில் வலய கல்வி அலுவலகத்தில் போதைப்பொருளுக்கு எதிராக செயற்படுவோம் சத்தியப்பிரமாண நிகழ்வு



எதிர்கால சந்ததியினருக்காக போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டை உரிமையாக்குவதற்காக போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு அர்ப்பணிப்பதாக முழு தேசமும் ஒன்றிணைந்து உறுதிமொழி எடுக்கும் 'சித்திரை மாத உறுதிமொழி' நிகழ்வு இன்று நாடளாவிய ரீதியில் முற்பகல் இடம்பெற்றது.

திருக்கோவில் வலய கல்வி அலுவலகத்தில் போதைப்பொருளுக்கு எதிராக செயற்படுவோம் சத்தியப்பிரமாண நிகழ்வு வலய கல்வி பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் தலைமையில் இன்று புதன்கிழமை (3) காலை இடம்பெற்றது.

இதன்போது தேசியகொடி ஏற்றப்பட்டு,தேசியகீதம் இசைக்கப்பட்டு , போதைப் பொருளுக்கு எதிராக செயற்படுவோம் என உறுதிமொழி தெரிவித்தார்கள்.

பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப்பணிப்பாளர்கள், உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், இணைப்பாளர்கள் மற்றும் அலுவலகத்தின் சகல பிரிவு உத்தியோகத்தர்கள் ,ஊழியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள் 
 உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்