சாதாரண தரத்தில் வரலாறு காணா சாதனை படைத்த கடுக்காமுனை வாணி வித்தியாலயம்



மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயம் 2018 டிசெம்பரில் நடைபெற்ற க.பொ.த சா.தரப் பரீட்சையில் வரலாறு காணாத சாதனையைப் படைத்துள்ளது. 2010ம் ஆண்டில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்குக் கல்விக் கோட்டத்தில் அமைந்துள்ள மட்/மமே/கடுக்காமுனை வாணி வித்தியாலயம் ஒரு கஷ்டப் பிரதேசப் பாடசாலை. 2018ம் வருடத்தில் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு இப்பாடசாலையிலிருந்து 27 மாணவர்கள் தோற்றினர். இவர்கள் அனைவரும் க.பொ.த உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளமை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய வரலாற்றில் முதல் சாதனையாகும்.

கணித பாடத்திற்கு   முறையான நியமனம் பெற்ற ஆசியர் இல்லாத நிலையில் குறித்த பாடசாலை மாணவர்கள் 100% சித்திபெற்று சாதனையைப் படைத்துள்ளனர். இதற்கு காரணமாக அமைந்த பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் நிச்சயம் பாராட்டிக் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தவிர, இலவசமான கற்பித்தலை மேற்கொண்ட ஆசிரியர்களோடு, கற்பித்தல், ஆலோசனைகள், வழிகாட்டல்களை வழங்கிய வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளும் பாராட்டிற்குரியவர்கள். கடந்த காலத்தில் குறித்த பாடசாலை உதைபந்தாட்டப் போட்டியில் தேசிய மட்டம் வரைச் சென்று சாதனை படைத்தமையும் குறிப்பிடத்தக்கது.