வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய மாணவர்களின் திறமை வெளிக்காட்டல் நிகழ்வு


மட்/ககு/ வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் Shakespearean English Club இனால் Talent Show 2019 கடந்த 4ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 9.31 க்கு வித்தியாலய நல்லையா மண்டபத்தில் மிக பிரமாண்டமான அளவிற்கு கல்லூரி அதிபர் திரு. க. பகீரதன் தலைமையில் நடாத்தப்பட்டது. இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக கல்குடா வலயக் கல்வி பணிப்பாளர் திரு. T. ரவி அவர்களும் கௌரவ அதிதிகளாக திருமதி. சா. ரவிராஜா , பிரதிக் கல்விப் பணிப்பாளர் முகாமைத்துவம், கல்குடா கல்வி வலயம் மற்றும் திரு. சி. துஸ்யந்தன். பிரதிக் கல்விப் பணிப்பாளர், திட்டமிடல், கல்குடா கல்வி வலயம் அவர்களும் சிறப்பு அதிதிகளாக கல்குடா கல்வி வலயத்தின் ஏறாவூர் பற்று 2 இற்கான கோட்ட கல்வி அதிகாரி திரு. S. தட்சணாமூர்த்தி அவர்களும் கோறளைப் பற்றிற்கான கோட்ட கல்வி அதிகாரி திரு. N. குணலிங்கம் அவர்களும் ஏறாவூர் பற்று நிகழ்ச்சி திட்டமிடல் இணைப்பாளர், வேள்ட் விசன் திரு. R. அமுதராஜா அவர்களும் அழைப்பு அதிதிகளாக கல்குடா கல்வி வலய சேவைக் கால ஆலோசகர், ஆங்கிலம் திரு. சு. விஜயகுமார் அவர்களும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு. N. நடேஸ் அவர்களும் பிற பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரிய மாணவர்களும் நிகழ்ச்சியில் தங்களது அபார திறமைகளை வெளிப்படுத்திய மாணவ செல்வங்களின் பெற்றோர்களும் பாடசாலை ஆசிரிய மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர். 

இந் நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் தங்களது திறமைகளை பல் வகைப்பட்ட நிகழ்ச்சிகளினூடாக வெளிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த வருடம் நடைபெற்ற ஆங்கில தின போட்டிகளில் முதன் முறையாக கல்குடா கல்வி வலயத்திலிருந்து தேசிய மட்டத்திற்கு தெரிவான இப் பாடசாலை கனிஷ்ட பிரிவு நாடகமும் மேடையேற்றப்பட்டது சிறப்பம்சமாகும். இந் நிகழ்விற்கு செங்கலடி செலான் வங்கி மற்றும் வேள்ட் விசன் நிறுவனம் பல பரிசில்களை வழங்கியதோடு அனுசரணையும் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.