கொடூரமான உயிர்த்த ஞாயிறு படுகொலையும் அரசியல்வாதிகளின் பங்கும்


கொடூரமான உயிர்த்த ஞாயிறு படுகொலையும்  அரசியல்வாதிகளின் பங்கும் 
  • பிராந்திய அரசியல் வாதிகளின் பங்கு 
  • அரச தலைவரின் பங்கு  
(ஆர்.சயனொளிபவன் & TEAM ) 
உயிர்த்த ஞாயிறு படுகொலை இன்று இலங்கையை மட்டும் இன்றி உலகையே சோகத்திற்கு உள்ளக்கிய ஒரு துயரமான நிகழ்வாக மாற்றியுள்ளது.

அண்மை காலமாக முக்கியமாக கிழக்கு மாகாணத்தை பொறுத்தளவில் முஸ்லீம் அரசியல் தலைமைகள் அவர்களுடைய சமூகத்திற்குள் இன மத உணர்வுகளையும் இன குரோதத்தையும் தூண்டும் வகையில் தமது உரைகளை நிகழ்த்துவதும் ஒரு கலாசாரமாக உள்ளது. இவர்கள் தமது அரசியல் பயணத்தில் முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கியை தக்க வைத்து கொள்வதற்கு ஒரு ஆயுதமாக இந்த யுக்தியை உபயோகிக்கின்றனர். இவற்றை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் இவர்களால் நிகழ்த்தப்பட்ட உரைகளின் பல வீடியோக்கள் கடந்த சில நாட்களாக உலாவந்து கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது




மிக முக்கியமாக ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் செயற்பாடு அண்மைக்காலமாக கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. மேலும் இவருடைய செயற்பாடுகளை சுமந்திரன் எம்.பி இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய தனது உரையின் மூலமும் குறிப்பிட்டுள்ளார். ஹிஸ்புல்லாஹ்வை பொறுத்தளவில் ஜனாதிபதி மைத்திரியால் ஆளுநர் பதவி பின்வரும் காரணங்களுக்காக வழங்கப்பட்டது என்ற ஒரு கருத்து கிழக்கு மக்களிடையே நிலவுகின்றது .

    -  கிழக்கில் உள்ள சமூகங்களை பிரிப்பது
 - தமிழ் சமூகத்திற்குள் முடிந்தவரை பிரிவுகளை ஏற்படுத்துவது - (MP சுமந்திரன் பாராளுமன்றத்தில் இன்று குறிப்பிட்டது போல் - குழப்பங்களை தமிழ் சமூகங்களுக்குள் ஏற்படடுத்த முற்படுவது

இவர் அரசியல் சுயலாபத்திற்க்காக தனது சமூகத்தை பிரிப்பதிலும் பின்நிற்கவில்லை . அமரர் அஸ்ரப்புடன் சேர்ந்து அரசியலில் சுழட்சிமுறை பாராளுமன்ற உறுப்பினராக முதல் இரு வருடங்களுக்கு என பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்த இவர் முதல் இரு வருட காலப்பகுதியின் முடிவில் இவர் தன்னுடைய சுழற்சி முறை பதவியில் இருந்தும் விலகவில்லை. இச் செயல் அமரர் அஸ்ரபிட்கும் பெரும் தலை இடியாகவும் இருந்துள்ளது இவர் எந்த ஒரு முஸ்லீம் சமூகத்தால் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலும் நீண்ட காலம் நீடித்ததாக சரித்திரமில்லை இவர் ஒருவரால் தான் மட்டும் ஒரே நேரத்தில் முன்னாள் சனாதிபதிகளான சந்திரிக்கா, மஹிந்த மற்றும் மைத்திரி ஆகியோருக்கு நெருங்கிய சிநேகிதராக இருக்கமுடிந்தது
                      
ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் மறுபக்கம் பெரும்பான்மை சமூகத்திற்கு இதுவரை தெரிவதற்கு சந்தர்ப்பங்கள் இருக்கவில்லை ஆனால் இந்த கொடூரமன தாக்குதலின் பின் ஆளுநர் ஹிஸ்புல்லாவையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்று அழுத்தங்கள் வந்தவண்ணமே உள்ளது. இதன் மூலம் இவருடைய மறுபக்கம் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்துள்ளது. இதுவரை ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் சிங்கள அரசியல் தலைமைகளின் செல்ல பிள்ளையாக இருந்துகொண்டே மத வாதத்தை முஸ்லீம் இளைஞர்களுக்குள் வளர்த்தவண்ணமே இருக்கின்றார். இவருடைய இந்த செயல் இன்று பெருன்பான்மை சிங்கள மக்கள் மட்டுமின்றி முழு இலங்கையையுமே நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.




அரச தலைவரின் பங்கு அடுத்த பதிவில் ……..