இந்தியாவில் சிறந்த ஆய்வாளர் விருதினை பெற்றுக்கொண்ட மண்ணின் மைந்தர் கலாநிதி து.பிரதீபன்


இந்தியக் கல்வியல் ஆய்வாளர்கள் சங்கத்தின் நான்காவது விருதுவழங்கல் நிகழ்வும் சர்வதேசக் கருத்தரங்கும் கடந்த மாதம் திருச்சி இந்தியாவில் இடம்பெற்றது. 

பல்வேறுபட்ட துறைகளில் சாதனைபடைத்துக்கொண்டிருக்கும் கல்வியலாளர்கள், ஆய்வாளர்கள் இவ்விழாவில் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். 

இதில் மட்டு மண்ணின் மைந்தரும் சிவானந்தாவின் பழைய மாணவருமான கலாநிதி துரையப்பா பிரதீபன் நூலக தகவல் விஞ்ஞானத் துறையில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் மேற்கொண்டு வரும் கல்வியியல் மற்றும் ஆய்வுச் செயற்பாடுகளுக்காக சிறந்த ஆய்வாளர் விருதினைப் பெற்றுக்கொண்டார். இவ்விழாவின் தொடர்ச்சியாக இடம்பெற்ற சர்வதேச ஆய்வரங்கின் வளவாளராகவும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

ஊவாவெல்லஸப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட நூலகராகப் பணியாற்றி நூலக விஞ்ஞானத்துறையில் பல்வேறுபட்ட பங்களிப்பினை நல்கிவரும் இவர் இந்தயாவில் உள்ள சுமார் 07 பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவகங்களில் கலாநிதிப்பட்ட ஆய்வாளர்களுக்கான நிரந்தர வெளியகப் பரீட்சகராகப் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.