உயிர்த்தெழுந்த ஞாயிறு – பாராளுமன்ற தெரிவுக்குழு குறித்து சபையில் கருத்துக்கள் தெரிவிப்பு


ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விடயங்களை கண்டறிவதற்காக பாராளுமன்றத்தில் அறிக்கை இடுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள விஷேட தெரிவுக்குழுவின் செய்திகளை வெயளியிடுவதற்கு ஊடகங்களுக்கு இடமளிக்கமாறு சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன் போது உரையாற்றிய அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் அஜித் பி.பெரேரா பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் தொலைக்காட்சி வானொலி ஊடாக பொது மக்கள் அறியக் கூடிய வகையில் வசதிகள் செய்யப்பட வேண்டும் என்றார்.

பாராளுமனற் உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாறசிங்க உரையாற்றுகையில் பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள் மூலம் பாரிய பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கூறினார். இவற்றுக்கு ஊடகங்களில் முக்கிய இடம் கிடைப்பதில்லை என கூறினார். நிலையியல் கட்டளையில் உள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அடுத்த மாதம் அளவில் ஊடகப்பிரிவு ஒன்று பாராளுமன்றத்தில் அமைக்கப்படவுள்ளது. தற்பொழுது தடைகளை நீக்குவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக சபை முதுல்வர் மேலும் தெரிவித்தார்.