மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்துள்ள உறவுகளுக்கு திருப்பலி,ஆத்மா சாந்திப் பூசையும் இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சீயோன் தேவாலயத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடாத்தப்பட்ட வன்செயலினால் உயிர்நீத்த உறவுகளுக்கு திருப்பலி,ஆத்மாசாந்திப் பூசையும் இடம்பெறவுள்ளது என கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தலைவரும்,சட்டத்தரணியுமான த.சிவநாதன் இன்று ஞாயிற்றுக்கிழமை(19)தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று உயிரிழந்துள்ள உறவுகளுக்கு கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(21)காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் 31ஆம் நாள் அஞ்சலியும்,ஆத்ம சாந்தி திருப்பலிப் பூசை நடாத்தப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் நண்பகல் 12.00 மணியளவில் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆத்மசாந்தி பூசையும் நடைபெறவுள்ளது.அதன்பின்னர் உறவுகளுக்காக அன்னதானம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.எனவே இந்நிகழ்வில் அனைத்து நண்பர்கள்,உறவினர்கள்,உயிர்நீத்த உறவுகளின் குடும்பத்தார்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளது.













