போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப்பரிவிற்குட்பட்ட மீள்குடியேற்றப்பட்ட மண்டூர்,பாலமுனை பிரதேச மக்களுடனான கலந்துரையாடல் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கடந்த முப்பது வருடங்களாக பாலமுனை பிரதேசத்தில் உள்ள மக்களின் இருப்பிடங்களை இராணுவம்,விசேட அதிரடிப்படை பின்னர் பொலிஸார் தங்களின் முகாம்களாக பயன்படுத்தி வந்திருந்தனர்.அவர்கள் அனைவரும் இடம்பெயர்ந்து அவர்களின் உயவினர்களின் வீடுகளில் வாழ்ந்து வந்திருந்த நிலையில் அங்கிருந்த பொலிஸாரின் முகாம் அகற்றப்பட்டு அவர்களின் காணிகளும் வீடுகளிலும் மீள்குடியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் இவர்களுக்கான குடிநீர்,இலவச வீடுகளோ மின்சார வசதிகளோ செய்து கொடுக்கப்படவில்லை என்பதே அவர்களின் கருத்துக்கள் இந்நிலையில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வேண்டுதலுக்கமைவாக பட்டிருப்பு தொகுதியின் ஐக்கிய தேசியகட்சியின் அமைப்பாளரும் போரதீவுப்பற்று வெல்லாவெளி பிதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான சோ.கணேமூர்த்தி அவர்கள் இவர்களை சந்தித்து அனைத்துப்பிரச்சனைகளையும் கேட்டறிந்தார்.
விரைவில் அவர்களுக்கான மின்சார வசதி மற்றும் இலவச வீட்டுத்திட்டம் குடிநீர் வசதிகள் அனைத்தும் செய்து தருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.












