
மட்டக்களப்பு, கல்லடி ராமகிருஷ்ண மிஷன், ஒரு தன்னார்வ தொண்டு நிலையம் என்பது சகலரும் அறிந்த விடயமே. மிஷனின் பல்வேறுபட்ட சேவைகளில் ஒன்றாக அருகிவரும் வாசிப்புப் பழக்கத்தை மக்கள் மத்தியில் ஊக்கப்படுத்தும் முகமாக தற்பொழுது பொது மக்களின் பாவனைக்காக புதிய நூலகம், புதிய ஆன்மீக புத்தக நிலையம் என்பன திறக்கப்பட்டுள்ளன.
நமது நூலகத்தில் மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் அனைவரது மேம்பாட்டிற்குமான ஆன்மீகம், புராணம், இதிகாசம், சுயமுன்னேற்றம், வாழ்வியல் மற்றும் மாணவர்களது பாடவிதான பயிற்சி நூல்கள் போன்ற பல்வேறுபட்ட புத்தகங்களை வாசித்துப் பயன் பெறலாம். இதே போன்று தங்கள் சொந்தப் பாவனைக்குத் தேவையான புத்தகங்களை நமது ஆன்மீக புத்தக நிலையத்தில் வாங்கிச் செல்லலாம்.
நூலகம், புத்தக நிலையம் என்பன காலை 09.00 மணி முதல் பகல் 01.00 மணி வரையும் மாலை 02.30 மணி முதல் 05.30 மணி வரையும் திறங்திருக்கும்.
நூலகத்திற்கு மட்டும் திங்கட்கிழமை விடுமுறை. புத்தக நிலையம் அனைத்து நாட்களும் திறந்திருக்கும். பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து இந்த வாய்ப்பை பாவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

















