பல்வேறு சமூகநல பணிகளை மேற்கொண்டு வரும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுவதனை முன்னிட்டுஇ நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் 23.06.2019ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் மட் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 2005 கல்வி பொதுத் தராதர உயர் தர பழைய மாணவர்களின் அனுசரணையில் இடம்பெறவுள்ளது.
மேற்படி பழைய மாணவர் சங்கத்தினால் தொடர்ச்சியாக 06 வது வருடமாக இடம்பெறவுள்ள இந்த மாபெரும் இரத்ததான முகாமில் உயிர் காக்கும் உதிரத்தை தானமாக அளித்து நன்மை பெறுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்













