(க.விஜயரெத்தினம்)
கிழக்கு மாகாண புதிய ஆளுநராக ரோகண பியதாய நியமிக்கப்படவுள்ளார் என இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளரும்,ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியின் தலைவருமான,என். விஸ்வகாந்தன் மற்றும் மஹிந்த அமர*வீர தெரிவித்தார்கள்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் முன்னாள் பொதுச் செயலாளராக பல ஆண்டுகள் கட்சிக்காக காத்திரமான பணிகளை முன்னெடுத்தவர்.இவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்படவுள்ளதாக கொழும்பு உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றது.
கிழக்கு மாகாணத்திற்கு புதியதொரு ஆளுநரை நியமிக்க வேண்டுமென இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் என்.விஸ்ணுகாந்தன் ஐக்கி மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவும்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உயர்பீட அமைப்பாளர்கள்,உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தியதாலும் இவர் நியமிக்கப்படலாம்.













