முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர், ஆகிய ஒன்பது பேரும், தங்களுடைய இராஜினாமா தொடர்பில், ஒரே கடிதத்தில் கொடுத்திருந்தோம் என்று தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அரசமைப்பின் பிரகாரம் தனித்தனியாக இராஜினாமா கடிதங்களை கொடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர் என்றார்.
இதேவேளை, மகாநாயக்க தேரர் உள்ளிட்ட சங்க சபையின் அறிவுறுத்தல் தொடர்பிலான தேரர்களை சந்தித்து, தங்களுடைய நிலைப்பாட்டை அறிவிப்போம் என்றும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் விசேட அறிவித்தல் விடுத்து, உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்













