ஏறாவூரில் உள்ள தமிழ் கிராமங்களின் பின் பகுதியினூடாக ஊடறுத்து ஏறாவூர் முஸ்லிம் பகுதியிலிருந்து 2.45 கி.மீ காபட் வீதி இடும் திட்டம் ஒன்றை ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தினூடாக அப்பகுதி அரசியல்வாதிகள் கொண்டு வந்துள்ளனர். இவ்வீதி ஏறாவூர் காதியார் சந்தியிலிருந்து ஆரம்பமாகி ஏறாவூர்-05 தமிழ்க்கிராமம், சேனைக்குடியிருப்பு தமிழ்க்கிராமம், பழைய ஊர் தமிழ்க்கிராமம், அம்மன் புரம் தமிழ்க்கிராமம், குமாரவேலியார் தமிழ்க்கிராமம் ஆகிய கிராமங்களின் பின் பகுதிகளை ஊடறுத்து இவ்வீதி பதுளை வீதியுடன் இணைகிறது.
இதிலுள்ள பிரச்சினைகள்
01. முஸ்லிம் பகுதியிலிருந்து ஆரம்பமாகும் இவ்வீதி தமிழ்க்கிராமங்களை ஊடறுத்துச் செல்லும் போது விவசாயக் காணி, குடியிருப்புக் காணி, நீர் நிலை, கால் நடை வளர்ப்புக் காணி என பல வாழ்வாதாரக் காணிகள் உள்வாங்கப்படும்.
02. காலப்போக்கில் பின் பக்கமாக மக்களது குடியிருப்புக் காணிகளும் பறிபோகும் அபாயம்.
03. சட்டத்துக்கு விரோதமான பொருட்களைக் கொண்டு செல்ல வாய்ப்புண்டு.
இதிலுள்ள பிழைகள்
01. ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவு தமிழ்ப் பகுதிகளையே 99 வீதம்
உள்ளடக்கியிருக்கும்போது அந்த பிரதேச செயலாளரின் அனுமதி இல்லாமல் ஏறாவூர்
நகர் பிரதேச செயலாளர் வீதியை எப்படி தீர்மானிக்க முடியும்?
02. ஏறாவூர் பற்று பிரதேச சபை அல்லது ஏறாவூர் பற்று பிரதேச செயலக தொழிநுட்ப
உத்தியோகத்தருக்கு தெரியாமல் எப்படி ஏறாவூர் நகர சபை தொழிநுட்ப
உத்தியோகத்தர் வீதிக்குரிய செலவீனங்களை தீர்மானிக்க முடியும்?
03. தமிழ் மக்கள் போக்குவரத்து பாவனை செய்யாத இடத்தில் ஏன் இந்த வீதி?
மக்கள் கோரிக்கை
எமது ஐந்து கிராமங்களில் மக்கள் பாவனைக்குரிய இடங்களில் வீதிகள் இல்லாததால் அவ்வீதியை பாவனைக்குரிய இடத்தில் போட்டுத் தரவும் என வினாவுகின்றனர். மக்களின் விருப்பத்திற்கு மாறாக தமிழ் மக்களின் நிலவளத்தை சூறையாடும் நோக்கில் இவ் வீதிபோடப்படுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்! மக்கள் விரும்புகின்ற இடத்திற்கு அவ் வீதி போடப்பட வேண்டும்! என்றார் கள விஜயம் மேற்கொண்ட
வியாழேந்திரன் Mp.













