பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று மீண்டும் கூடுகிறது


உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று மீண்டும் கூடுகிறது. 

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபயசேகரவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன இன்றைய தினம் சாட்சியமளிக்கவுள்ளனர். 

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் வருண ஜயசுந்தர மற்றும் அந்தப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டீ சில்வா ஆகியோரும் இன்றைய தினம் சாட்சியமளிக்கவுள்ளனர். 

இந்தப் பாராளுமன்ற தெரிவுக் குழு தொடர்பான செய்திகளை நேரடியாக திரட்டுவதற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.