வவுணதீவில் பொலிசாரை சுட்டுக் கொலை செய்ய மில்கான், கபூர் பயன்படுத்திய இரு மோட்டர் சைக்கிள் மீட்பு


-சரவணன் -

ஜ.எஸ்.ஜஎஸ். ஷரானின் முதல் முதல் தாக்குலான மட்டக்களப்பு வவுணதீவில் பொலிசாரை சுட்டுக் கொலை செய்ய பயன்படுத்திய இரு மோட்டர் சைக்கிள்களை காத்தான்குடி மற்றும் ரிதிதென்னை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (15) சிஜடி யினர் மீட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

கடந்த வருடம் நவம்பர் 29 ம் திகதி வவுணதீவு வலையிறவு பாலம் அருகில் பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவரை துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு அவர்களிடம் இருந்த இரு கைது துப்பாக்கியை எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு தலமை தாங்கிய சவூதி அரோபியாவில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த முகமது ஆப்தீன் மில்கான், மற்றும் ஷரானின் சாரதியான முகமது சர்ப் ஆதம்பாலெப்பை கபூர் ஆகிய இருவரும் பயன்படுத்திய பல்சர் ரக, மோட்டர் சைக்கிளை காத்தான்குடியில் உள்ள மில்கானின் வீட்டில் வைத்தும். பொலநறுவை மட்டக்களப்பு எல்லைப் பிரதேசமான ரிதிதென்னை பகுதியில் வைத்து சாரதியான முகமது சர்ப் ஆதம்பாலெப்பை கபூரின் நண்பனின் வீட்டில் வைத்து சூட்டிப் பப் ரக மோட்டார் சைக்கிள்கள் ஆகிய இரு மோட்டர் சைக்கிள்களை மீட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை சிஜடி யினர் மேற்கொண்டுவருகின்றனர் அவர் தெரிவித்தார்.