(டினேஸ்)
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் ஊடக சந்திப்பு நேற்று 30 ஆம் திகதி அம்பாறை திருக்கோவில் இலக்கம் 05 கடைத்தொகுதியில் அமைந்துள்ள சங்கத்தின் காரியாலயத்தில் அதன் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் நடைபெற்றது.
இதன் போது கருத்துத் தெரிவித்த சங்க உறுப்பினர்கள் யுத்தம் முடிவிற்கு வந்து பத்து வருடகாலங்கள் ஆகியும் எமது உறவுகளை உயிருடன் கையளித்து அவர்களுக்கு என்ன நடந்தது என்னவென்று இவ்வளவு நாளாக தெரியவில்லை நாம் எமது உறவுகளை மகன்மார்களை மீட்பதில் பல வருடமாக போராடி வருகின்ற சந்தர்ப்பத்தில் எமது நிலை மாறி உயிரை பிரியும் நேரங்களும் வருகின்றன கடைசியில் கையளிக்கப்பட்டவர்களை மீட்கப்போய் உயிர்பிரிந்த என்ற கதையாகவே உள்ளது ஆனால் நாம் உயிர் பிரிந்தும் எமது போராட்டத்தை நிறுத்திவிடாது தொடர்ந்தும் போராடும் நிலையில் தள்ளப்பட்டுள்ளோம்.
அத்துடன் இப்போராட்டத்தில் உள்ள எமது அம்மாக்களை இனந்தெரியாத நபர்களின் மூலம் அச்சுறுத்தப்படுகின்றனர் இதற்கு இந்த அரசாங்கம் விசாரணை செய்து அதற்குரிய நபர்களை சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தவேண்டும் கன தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்நிலையில் இன்றைய தினம் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.















