அதிக நிதிகள் சிறுவர் உரிமை அபிவிருத்திகென ஒதுக்கீடு செய்யப்பட்டு பலதிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன; மாவட்ட அரசாங்க அதிபர்



(வரதன்)

மாவட்ட செயலகங்கள் ஊடாக அதிக நிதிகள் பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டு சிறுவர் உரிமை அபிவிருத்திக்கும் மற்றும் பெண்கள் அபிவிருத்திகென ஒதுக்கீடு செய்யப்பட்டு அதிக திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயக்குமார் இன்று மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற மாவட்டத்தின் சிறுவர்களின் உரிமைகள் சம்பந்தமான மீளாய்வு கூட்டத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

மாவட்ட உதவி செயலாளர் ஏ.நவேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற இவ் மாவட்டத்தின் சிறுவர்களின் உரிமைகள் சம்பந்தமான மீளாய்வு கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள் மற்றும் பொலிஸ் நிலைய சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி திட்ட அதிகாரிகள் எனப்பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இங்கு எதிர்காலத்தில் மாவட்டதின் சகல பிரதேச செயலகத்தினுடாக சிறுவர் உரிமைகள் அபிவிருத்தி மற்றும் பெண்கள் அபிவிருத்திகென வினைதிறனுடைய திட்டங்கள் வகுக்கப்பட்டு முன்னெடுக்கப்படவுள்ளதுடன் மற்றும் சிறுவர் பாடசாலை இடை விலகல் மற்றும் இளவயது திருமணம் போதைப்பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஸ்பிரையோகம் என பலதரப்பட்ட விடயங்கள் இன்றைய மீளாய்வு கூட்டத்தில் ஆராயப்பட்டது.