-எப்.முபாரக்-
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக் கத்தினால் (கபே) ஏற்பாடு செய்யப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களுக்கான இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று (03) கிண்ணியா பொது நூலக சபைக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரனை அதிகாரிகளை வளவாளர்களாக கொண்டு நடாத்தப்பட்டது.
இக் குறித்த செயலமர்வில் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரி லக்மால்,கபே அமைப்பின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் ஆர்.எம்.றாபில்,பொலிஸ் அதிகாரிகள்,சிவில் சமூக அமைப்புக்கள், கிண்ணியா சிரேஷ்ட பிரஜைகள் சங்க உறுப்பினர்கள், சமாதான நீதவான்கள் சங்க உறுப்பினர்கள், கிண்ணியா பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
















