“கிழக்கிலங்கை தமிழ் நாவல்கள்” ஆய்வுநூல் வெளியீட்டு விழா

         (ரவிப்ரியா)



கிழக்கு மாகாண நாவல்கள் பற்றிய முதலாவது ஆய்வு நூல் கடந்த ஞாயிறு அன்று மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் அதிபர் அறநிலா அரங்கில் பேராசிரியர் மௌலவிஎம்.எஸ்.எம்;  ஜலால்தீன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தனது கலாநிதி பட்டத்திற்காக அறிக்கையிட்டதை, சமுக அரசியல் நோக்குடனான “ கிழக்கிலங்கை தமிழ் நாவல்கள் “  என்ற தலைப்பில் ஆய்வு நுலாக வெளிக் கொணர்ந்துள்ளார்ஆய்வாளர் கலாநிதி பிர்தௌஸ் சத்தார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஆய்வு மன்றம் வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது. தென்கிழக்கு மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் முக்கியஸ்தர்கள்.கலாநிதிகள். விரிவுரையாளர்கள் ஆகியோர் என கல்வியவாளர்கள் மண்டபத்தில் நிறைந்து காணப்பட்டனர். பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்எம்.கே.எம்.மன்சூர் கலந்து கொண்டார்.
முதன்மை அதிதிகளாக ஆய்வுநூலை நெறிப்படுத்திய கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ், தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி கலாநிதிஎஸ்;.எம்.எம்.மஸாஹிர் ஆகியோரும், கௌரவ அதிதிகளாக எழுத்தாளர் உமா வரதராஜன், கவிஞர் சோலைக்கிளி, மருதமுனை ஹசன் ஆகியோரும் மண்டபத்திற்கு பெறுமதிசேர்த்தனர்.
சற்று தாமதமாக ஆரம்பித்த நிகழ்வானது தரம் நிறைந்த இலக்கிய நிகழ்வாக சுமார் 3 மணித்தியாலங்களாக எவ்வித தடங்கலுமின்றி பார்வையாளர்களின் சிந்தனையை நூலின் மீதுகுறி தவறாமல்,  குவிய வைத்து;, கடற்கரை மணலில் அண்ணாந்து படுத்து முழுமையான ஆண்டாரை பார்ப்பதுபோன்ற பரவசத்தை ஏற்படுத்தியது.
தலைவர் மற்றும் ஆய்வரை செய்தோரும் மற்றும் பேச்சாளர்களும் நூலை மட்டுமல்ல நுலாசிரியரின் முதற்தர அந்தநாள் சுதந்திர வேட்கை கொண்ட குடும்ப பின்னணி,தன்னம்பிக்கை, ஆற்றல், குடும்ப ரீதியாக எதிர்கொண்ட சவால்கள் ,(12 வயதில் தந்தையை பறி கொடுத்து  11 பேர் கொண்ட குடும்ப சுமையை இளமையிலேயே சுமந்தவர்)    எதிர்நீச்சல், நடன ஆற்றல், என்பன பற்றியும் வெளிப்படுத்தவே செய்தனர்.
அழைப்பிதழ் பதாதை என்பவற்றில் தன் படத்தைப் போடாமல் தான் கற்ற பாடசாலையின் அதிபர் கவிஞர் அமரர் அறநிலாவின் படத்தை போட்டிருப்பதும,; இந்த அரங்கிற்கும்அறநிலா அரங்கு என பெயர் சூூட்டி இந்த அரங்கேற்றத்தை நடாத்தவதும் உண்மையில் மெச்சத்தக்க முதன்மையான வியப்பளிக்கும் விடயம் என பிரதம அதிதி குறிப்பிட்டதையும்இங்கு  குறிப்பிடுவது பொருத்தமே. அதேபோல் அரங்கில பலராலும்; முன்வைக்கப்பட்ட பொதுவான கருத்துக்கள் பின்வருமாறு.
குறிப்பாக ஆய்வர்ளாகள் அனைவருமே இது ஒரு காலகட்டத்திற்கான கிழக்கு நாவல்களின் முதலாவது ஆய்வாக அமைகின்றது என்பதில் உடன்பட்டு நின்றார்கள்.
வெளிவாரியாக நின்று இந்த ஆய்வை மிகவும் சிரமமளித்த நாடு கடந்தும் எமது நாட்டிலும் நாவல்கள் தேடல,; என்ற கடின பணியை  கடந்து ஆய்வு மேற்கொண்டுள்ளமையானதுசாதனைக்குரிய விடயம்.
வெறும் பட்டத்திற்காக இந்த ஆய்வை செய்யாமல் உண்மையான இலக்கிய அடிமனது உணர்வுடன் ஆர்வத்துடன் இந்த ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றது.
நாவல்களை பல்வேறு பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தி ஆய்வு செய்திருப்பது விசேட அம்சமாகும்.
ஆய்வுக்குட்படுத்திய நாவல்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பற்றி சிறு குறிப்பு அட்டைப்படம் என்பன நேர்த்தியாக தொகுக்கப்பட்டிருப்பது விசேட அம்சமாகும்.; இத அவர்களுக்கானகௌரவமும் கூட!
இந்த நாவல்களில் காணப்படும் கலை பண்பாட்டு பாரம்பரிய அம்சங்கள் மரப மற்றும் சாதி தொடர்பாக ஆய்வு செய்யப்படடிருப்பதும் நூலுக்கு பெறுமதி சேர்க்கின்றது.
இந்தநூலின் அமைப்பிற்கு சீ.ருத்திரா என்பவரின் கரங்களும் பின்னாலிருந்து செயற்பட்டிருக்கின்றது.
ஆய்வாளர்களின் கருத்துப்படி இந்த  ஆய்விற்காக அவர் எடுத்துள்ள காலம் 5-10 வருடங்கள் ஆகும். இது அவரைப் பொறுத்தவரையில் அவரின் தவக்காலமாகவே கருதவேண்டும்.
இந்த விழாவில் முக்கிய செய்தியொன்றும் எழுத்தாளர்களிடம் விடுக்கப்பட்டது. பன்னெடுங்காலமாக தமிழ் முஸ்லிம் உறவானது குடும்ப உறவு போல் இறுக்கமாகவும்உன்னதமாகவும் இருந்து வந்துள்ளது. அதைக் குழப்புவதற்கு மூன்றாம் தரப்பு ஒன்று தற்போது முழு முயற்சியில் இறங்கியுள்ளது. இதைத் தடுப்பதற்கு எழுத்தாளர்கள் தங்கள்படைப்புக்களை சமூக ஒற்றுமையை வலுப்படுத்த முன்வரவேண்டும என்ற முக்கிய கோரிக்கை காலத்தின் கட்டாய தேவையாக முன்வைக்கப்பட்டது.;