மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்



நேற்று நள்ளிரவு முதல் மின்சாரசபைக்கு எரிபொருள் விநியோகிப்பதை நிறுத்துவதற்கு பெற்றோலியத்துறை தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன

கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை வரையான எண்ணெய் குழாய்களின் திருத்தப் பணிகளுக்கு மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தடங்கல்களை ஏற்படுத்துவதாக தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரும் எரிபொருள் கப்பல்களிலிருந்து கொலன்னாவை வரை எரிபொருள் எடுத்துச் செல்லும் குழாய் தொகுதி 75 வருடங்கள் பழைமை வாய்ந்தன

ப ல சந்தர்ப்பங்களில் இதில் கசிவுகள் ஏற்பட்டதுடன் 5 அரை கிலோ மீற்றர் தூரத்திற்கு இந்த குழாய்த் தொகுதியில் சில பகுதிகள் சிதைவடைந்துள்ளதால் முழுமையாக கைவிடப்பட்டுள்ளன.

இதனால் தற்போது இரண்டு தொகுதிகளே பாவணையில் உள்ளன.

அந்த தொகுதிகளும் சிதைவடைந்துள்ளதால் கப்பல்களிலிருந்து எரிபொருள் விநியோகிக்கும் போது எடுக்கும் நாட்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொழிஙற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதனால் வருடத்தில் கப்பல்களுக்கு வழங்க வேண்டிய வாடகைத் தொகை 04 மில்லியன் டொலர்களாகும்.