துறைநீலாவணையில் பாலர் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அமைச்சர் மனோ கணேசன் பங்கேற்பு



(இ.சுதாகரன்)

துறைநீலாவணை வடக்கு கண்ணகி சனசமூக நிலைய புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 22ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அமைப்பின் தலைவர் எல். சுதாகரன் தலைமையில் நடைபெற்றது.

அரச கரும மொழிகள் தேசிய நல்லிணக்க மற்றும் சமூக மேம்பாடு இந்து கலாசார அமைச்சின் மட்டு மாவட்ட இணைப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் அவர்களின் வேண்டுகோளிற்கு அமைவாக அமைச்சினால் பாலர் பாடசாலைக் கட்டிடத்திற்கு ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அதற்கு அமைவாக குறித்த பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய நல்லிணக்க இஅரச கரும மொழிகள் மற்றும் இந்து கலாசார அமைச்சர் கௌரவ மனோ கணேசன் அவர்களும். அதி விசேட அதிதியாக அமைச்சரின் கிழக்கு மற்றும் மட்டு மாவட்ட இணைப்பாளர் க.கோபிநாத் . விசேட அதிதிகளாக மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம், பட்டிருப்பு வலயக் கலவிப் பணிப்பாளர்.ந.புள்ளநாயகம் இகளுதாவளை பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன், பிரதேச சபையின் செயலாளர் எஸ்.லெட்சுமிகாந்தன், பிரதேச சபை உறுப்பினர் கா.சரவணமுத்து மற்றும் அழைப்பு அதிதிகளாக துறைநீலாவணைக் கிராமத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.