இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டொக்டர் இந்திரஜித் குமாரசாமி, சற்றுமுன் பாராளுமன்ற தெரிவுக்குழு சாட்சியங்களை வழங்கத் தொடங்கியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு இன்றும் (26) காலை ஒன்று கூடியுள்ளது.
இதேவேளை, பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சட்டமா அதிபரும் இன்று தனது சாட்சியங்களை வழங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.













